எட்டு ஆப்பிள் ஐ-போன்களை தன் செல்ல நாய்க்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்த சீன தொழிலதிபர் மகன்

எட்டு ஆப்பிள் ஐ-போன்களை தன் செல்ல நாய்க்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்த சீன தொழிலதிபர் மகன்
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் மகன்.

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் வாங் ஜெயின்லின் இவரது மகனான வாங் சிகாங்(28) தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்ற நாய்க்கு எட்டு ஐ-போன் 7-களை பரிசாக அளித்துள்ளார்.

கோகோ அமர்ந்த நிலையில் அதனைச் சுற்றி எட்டு ஐ- போன் 7-கள் கிடக்கிறது. இதனை புகைப்படம் எடுத்து அதனை கோகோவின் சீன வலைத்தளப் பக்கமான வைபோவில் (ஃபேஸ்புக் பக்கம்) பதிவேற்றியுள்ளார் சிகாங். இந்தப் புகைப்படத்தின் மூலம் கோகோவுக்கு 1.9 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வலைப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் சீன வலைதளப் பக்கங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சீனாவின் பணக்கார நாய் என அந்நாட்டு செய்திதாள்களில் எல்லாம் வந்து கோகோவின் பெயர் வெளியாகியுள்ளது.

கோகோ பிரபலமாகியுள்ளது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஆப்பிள் வாட்ச் இரண்டை கோகோவுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார் வான் சிகாங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in