ஜப்பானில் அமெரிக்க கடற்படை கப்பல் விபத்து: 7 பேர் மாயம்

ஜப்பானில் அமெரிக்க கடற்படை கப்பல் விபத்து: 7 பேர் மாயம்
Updated on
1 min read

ஜப்பான் கடல்பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று வணிகக் கப்பலுடன் மோதியதில் 7 பேர் காணாமல் போனதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தரப்பில், "ஜப்பானில் தென் மேற்கில் யோசுகா கடற்பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அமெரிக்க கடற்படைக் கப்பல் ஜப்பானின் வணிகக் கப்பலோடு மோதியதில் ஏழு பேர் காணாமல் போயினர். மாலுமி ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போது கப்பலின் பாதுகாப்பு மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளித்துள்ளோம். காணமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான அமெரிக்க கப்பலுக்கு ஜப்பான் கடற்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் உதவியில் ஈடுபட்டு வரும் காட்சியை ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in