

ஜப்பானில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது.
இதுகுறித்து அமெரிக்க புவியல் ஆராய்ச்சி மையம் தரப்பில், "ஜப்பானின் தென் பகுதியிலுள்ள தீவுப் பகுதியான மியாகோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவாகியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கடல் அலையில் மாறுதல் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உடனடி பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை ஏற்பட்டதால் 18,000 பேர் உயிரிழந்தனர். அத்துடன் புகுஷிமா அணு உலையில் விபத்தும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.