

6 மாத கால விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் 3 பேர் நேற்று பூமிக்குத் திரும்பினர்.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதகாலமாக இவர்கள் தங்கியிருந்து பணியாற்றினர். இதில் இருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்.
கஜகஸ்தானின் தகிஸ்காசன் பகுதியில் பாராசூட் பொருத்தப்பட்ட சோயூஸ் விண்வெளி ஓடத்தில் இவர்கள் இறங்கினர். முன்னதாக வானிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் தரையிறங்குவது சற்று தள்ளி வைக்கப்பட்டது. அவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி பத்திரமாக தரையிறங்கினர். தரையிறங்கியவுடன் உடனடியாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1961-ல் யூரி காகரிகன் முதல்முதலாக விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கியபோது பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் இப்போது சிறிய மாற்றத்துடன் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.