

பிரிட்டனில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பவுண்ட் கரன்சி நோட்டுகள் நதி ஒன்றில் மிதந்து வந்துள்ளது.
நடைப்பயிற்சி மேற்கொண்டவரின் பார்வையில் அவைபடவே போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். ஸ்பால்டிங் நகரில் உள்ள நதியின் கரையருகே இப்பணம் மிதந்து வந்துள்ளது.
முதலில் இவை கள்ள நோட்டுகளாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவை நல்ல நோட்டுகள்தான் என்பது வங்கி அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.
பெரும்பாலான கரன்சி நோட்டுகள் சேதமடைந்து காணப்பட்டன. எனினும் மீதமுள்ள கரன்சிகளை பத்திரப்படுத்தியுள்ள போலீஸார் அதன் உரிமையாளர் யார் என்பது குறித்தும், எதற்காக பணத்தை நதியில் வீசினார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.-பி.டி.ஐ.