அமெரிக்க செனட் சபையில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதா நிறைவேறவில்லை

அமெரிக்க செனட் சபையில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதா நிறைவேறவில்லை
Updated on
1 min read

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை கூட்டாளியாக இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அப்போது அந் நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசிய பின்னர் இரு வரும் கூட்டறிக்கை வெளியிட்ட னர். இந்தியாவை பாதுகாப்புத் துறையின் முக்கிய கூட்டாளியாக அமெரிக்கா அங்கீகரித்திருப்ப தாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் மோடி உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள் குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் (என்டிஏஏ-17) ஒரு திருத்தம் செய்வது தொடர்பாக ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பாதுகாப்புத் துறை கூட்டாளியாக இந்தியாவுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறி இருந்தால், சர்வதேச போர்த்திறம் வாய்ந்த பாதுகாப்புத் துறை கூட்டாளியாக இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். ஆனால், சில உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக செனட் சபையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

என்டிஏஏ மசோதா ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதில் சில திருத்தங் களை செய்வதற்கு இரு கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித் திருந்த போதிலும், இதை நிறை வேற்ற முடியவில்லை.

இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேறாததை நேரடியாகக் குறிப்பிடாமல் ஜான் மெக்கெய்ன் கூறும்போது, “நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான சில விஷயங்கள் குறித்த மசோதா தொடர்பாக செனட் சபையில் விவாதம் நடத்தவும் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவும் முடியாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, ஆப்கனில் போர் நடைபெறும்போது அமெரிக்காவுக்கு உதவிய அந்நாட்டினருக்கு வழங்கப்படும் சிறப்பு குடியுரிமை விசா எண்ணிக் கையை அதிகரிக்க முடியாதது வருத்தமளிக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in