Last Updated : 22 Jul, 2016 03:03 PM

 

Published : 22 Jul 2016 03:03 PM
Last Updated : 22 Jul 2016 03:03 PM

டிரம்ப் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த சிறுமியின் பாடல்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியின் சார்பாக நடைபெற்ற மாநாட்டில் ஆறு வயது சிறுமி பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் பெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெவன்லி ஜாய் என்ற 6 வயது சிறுமி 'அமெரிக்கா காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர்.

தற்போது ஹெவன்லி ஜாய் மீண்டும் பிரபலமாகி இருக்கிறார் காரணம், குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் ஹெவன்லி பாடிய ''உலகத்தில் அமைதி பரவட்டும்'' என்ற பாடல்தான். இப்பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் கிளீவ்லான்டில் நேற்று (வியாழன்) இரவு நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் ஆறு வயது சிறுமி ஹெவன்லி, ''உலகத்தில் பரவிவரும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து உலகத்தில் அமைதி பரவ வேண்டும்'' என்ற பாடல் ஒன்றை பாடினார். இப்பாடல் அனைவரது கவனத்தையும் பெற்றது.

இம்மாநாட்டில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு பேசுகையில், “நான் அமெரிக்க அதிபரானால் விரைவில் குற்றங்களும் வன்முறைச் சம்பவங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும். மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

டொனால்டு ட்ரம்ப் பேசுகையில் இடைமறித்து பேசிய அரசியல் ஆர்வலர் மெடியா பெஞ்சமின், ''அமெரிக்காவில் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. நாம் மக்களிடம் கட்ட வேண்டியது பாலங்கள்தான் சுவர்கள் அல்ல''. என்று கூறியது மாநாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x