Last Updated : 01 Oct, 2014 10:07 AM

 

Published : 01 Oct 2014 10:07 AM
Last Updated : 01 Oct 2014 10:07 AM

‘உடல் பருமனைத் தவிர்க்க தினமும் ஓர் ஆப்பிள்’

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பது புகழ் பெற்ற வாசகம். தற்போது, தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் பிரச்சினையே ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த பேராசிரியர் கியுலி யானா நொராட்டோ தலைமையி லான விஞ்ஞானிகள் இதுதொடர் பான ஆய்வை வடமேற்கு பசிபிக் பகுதிகளில் ஆப்பிள் பயிரிடும் விவ சாயிகளிடம் மேற்கொண்டனர்.

ஆப்பிள்களில், குறிப்பாக பச்சை கிரான்னி ஸ்மித் ஆப்பிள் களில் உள்ள செரிமானம் ஆகாத கூறுகளை ஆய்வு செய்தனர். அவை, உடல்பருமன் பிரச்சினை களிலிருந்து பாதுகாக்கின்றன எனத் தெரியவந்துள்ளது.

பச்சை கிரான்னி ஸ்மித் ஆப்பிள் களில் அதிகம் உள்ள செரிமானம் ஆகாத மூலக்கூறுகல், பெருங் குடல் பகுதியில் நன்மை பயக்கும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி புரிகின்றன. மேலும், இந்த ஆப்பிள் களில் நார்ச்சத்து, பாலிபெ னோல்ஸ், குறைவான கார்போ ஹைட்ரேட்ஸ் ஆகியவையும் இதற்கு உதவி புரிகின்றன.

இந்த ஆப்பிளை மெல்லும் போது, இரைப்பை அமிலமும், செரிமான நொதிகளும் முழுமை யாக பெருங்குடல் பகுதியைச் சென் றடைகின்றன. ஒருமுறை நன்மை தரும் பாக்டீரியா பெருங்குடலில் உருவாகி விட்டால் நிரந்தரமாகி, குடலில் நன்மை தரும் பாக்டீரியா வளர்வதற்கு பெரும் உதவியாக உள்ளன.

இதுதொடர்பாக நொராட்டோ கூறும்போது, “கிரான்னி ஸ்மித் ஆப் பிள்களில் உள்ள செரிக்கவியலா மூலக்கூறுகள், மல பாக்டீரியா வின் விகிதாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, உடல்பருமனைக் கட்டுப்படுத்துகின்றன” என்றார்.

இக் கண்டுபிடிப்பு, உடல்பரும னுடன் தொடர்புடைய, சர்க்கரை நோய்க்குக் காரணமாக அமையும் நாட்பட்ட அழற்சி உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கு உதவும் என நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x