

உஸ்பெஸ்கிதான் அதிபர் இஸலாம் கரிமொவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உஸ்பெகிஸ்தான் அதிபர் கரிமொவின் மரணம் மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. தன்னுடைய பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைதிக்காக தொடர்ந்து முயன்றவர் கரிமொவ்.
கரிமொவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உஸ்பெகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக கடந்த ஆறு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இஸலாம் கரிமொவ் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.