

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர் இன்று அமெரிக்க உயர் அதிகாரிகளை சந்தித்தார். சந்திப்பின் போது, இந்தியப் பெண் தூதர் தேவயானி கோப்ரகடே கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய தூதராக பொறுப்பேற்பதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தப் பின்னர் முதல் பணியாக, அமெரிக்க அரசியல் விவகாரத் துறை துணைச் செயலர் வெண்டி ஷெர்மேனை சந்தித்தார் ஜெய்சங்கர்.
சந்திப்பின் போது, தேவானி கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டமல்லாமல் அவர் மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.