Published : 07 Feb 2014 01:01 PM
Last Updated : 07 Feb 2014 01:01 PM

அஜய் பங்கா - இவரைத் தெரியுமா?

$ மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரப் பட்டமும், ஐ.ஐ.எம். ஆமதாபாதில் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

$ நெஸ்லே நிறுவனத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்து 13 வருடங்கள் வேலை பார்த்தவர், பெப்சிகோ நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

$ 1996-ம் ஆண்டு சிட்டி குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்நிறுவனத்தில் அனைத்து நிதி சார்ந்த பணிகளையும் கவனித்துவந்தார். 2009-ம் ஆண்டு மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.

$ இந்திய அமெரிக்க பிஸினஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார்.

$ இவருடைய ஆண்டு சம்பளம் ஒரு கோடியே 13 லட்சம் டாலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x