

மியான்மர் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டின் மூத்த தலைவர் ஆங் சான் சூகியை நேபிடாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் மியான் மரில் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ஆங் சான் சூகி யுடன் சுஷ்மா முக்கிய ஆலோ சனை நடத்தினார். மேலும் மியான்மருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சுஷ்மா உறுதியளித்தார்.
ஆங் சான் சூகி அண்மை யில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ் மியான்மரில் பயணம் மேற் கொண்டிருப்பது முக்கியத் துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளி நாட்டு குடியுரிமை பெற்றிருப்ப தால் அவரால் பிரதமராக பதவி யேற்க முடியவில்லை. எனினும் அந்த நாட்டின் நிழல் பிரதமராக சூகி செயல்படுகிறார்.