

அமெரிக்காவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய லாரி டிரைவரால் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குடும்பம் ஒன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 38 வயதான ஜந்தன் கவை கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மகனின் குடும்பத்தைப் பார்க்கும் ஆவலில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர் ஜந்தனின் பெற்றோர்.
தந்தை கமல்நாயன் கவை (75) தாய் அர்ச்சனா கவாய் (60) மனைவி மற்றும் மகனுடன் கடந்த திங்கள் இரவன்று மகிழ்ச்சியாக காரில் வெளியே சென்றிருக்கிறார் ஜந்தன்.
அப்போது யாமங் மத்திய ஐஸ்லாண்டு சாலையில் குடிபோதையில் நிலைதடுமாறி வந்த கஸ்டவா ஜியர் (25) என்ற அமெரிக்கரின் லாரி ஜிந்தனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜந்தன் கவாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். ஜிந்தனின் தாய் மற்றும் தந்தை விபத்து நடந்த இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
32 வயதான ஜந்தனின் மனைவி, தலை மற்றும் உடம்பில் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜந்தனின் 11 வயது மகன் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கஸ்டவா ஜியரை கைது செய்த போலிஸார், அளவுக்கு அதிகமாக மது அருந்தி, வாகனத்தை செலுத்தியதே விபத்திற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.