

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 20 லட்சம் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
சிரியாவில் நடைபெற்று வரும் போர் குறித்து யூனிசெப் துணை இயக்குநர் ஜஸ்டின் கூறியதாவது:
அலெப்போ நகரில் குடிநீர் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் பேர் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். ஆங் காங்கே குட்டைகளில் தேங்கி நிற் கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழ்கின்றனர். அலெப்போ நகரம் அழிந்து கொண்டிருக்கிறது. அதை உலகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெறு கிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் மிதவாத எதிர்க் கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளிக்கின்றன.
சிரியாவின் வர்த்தக நகரான அலெப்போ எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நகர் மீது அதிபர் ஆசாத் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா இடையே அண்மையில் ஏற்பட்ட உடன் பாட்டின்படி அங்கு 7 நாட்கள் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. அதன்பின்னர் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவில்லை.
தற்போது அலெப்போ நகர் மீது அதிபர் ஆசாத் படைகள் கடுமையான வான்வழி தாக்கு தலை நடத்தி வருகின்றன. ஆசாத் துக்கு ஆதரவாக ரஷ்ய போர் விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. இதில் நேற்று 25-க் கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.