Published : 10 Jan 2017 10:17 AM
Last Updated : 10 Jan 2017 10:17 AM

கொழும்பு துறைமுக நகரில் சீன ராணுவமா?- இலங்கை பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பு இலங்கை கடற்படை, விமானப்படை வசம் மட்டுமே இருக்கும். சீனாவிடம் அளிக்கப்படாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியுடன் கொழும் பில் சுமார் 223 ஏக்கர் கடல் பகுதியை மணல், கற்களால் நிரப்பி துறைமுக நகரம் அமைக் கப்பட உள்ளது. அந்த நகரின் பாதுகாப்பு சீன ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: துறைமுக நகரின் பாதுகாப்பு இலங்கை கடற்படை, விமானப் படை வசம் மட்டுமே இருக்கும். சீனாவிடம் ஒப்படைக்கப்படாது.

உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படும். எனவே சீன ராணுவம் கொழும்பு துறைமுக நகரத்தில் நிலைநிறுத்தப்படும் என்ற கவலை தேவையற்றது.

குத்தகைக்கு மட்டுமே..

முந்தைய மஹிந்த ராஜபக்ச அரசு, சீனாவுக்கு முழு நிலஉரிமை வழங்க உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த உடன்பாட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம். அந்த நிலம் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கும் இலங்கை மண் விற்கப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அம்பாந் தோட்டை பகுதியில் சீன உதவி யுடன் தொழில் மண்டலம் அமைக் கப்பட உள்ளது. இதற்கு புத்த பிக்குகள், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக தொடர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியபோது, சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகால குத்தகை அடிப்படையிலேயே நிலம் ஒதுக்கப்படுகிறது. இதில் பெரும்பான்மை நிலம் அரசுக்குச் சொந்தமானது. அந்த தொழில் மண்டலத்தின் பாதுகாப்பு இலங்கை ராணுவ வசம் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x