

வங்கதேசத்தில் வலைப்பதிவர் கொலை வழக்கில் 2 மாணவர் களுக்கு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 6 பேருக்கு பல்வேறு கால அளவில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வலைப்பதிவரும் (பிளாகர்) ஷபாக் இயக்கத்தைச் சேர்ந்தவரு மான அகமது ரஜிப் ஹைதர் இணையதளத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை பதிவு செய்து வந்தார். இவர் கடந்த 2013 பிப்ரவரி 15-ம் தேதி டாக்கா அருகே மிர்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் (3) விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சயீது அகமது நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் தனியார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான முகமது பைசல் பின் நயெம் (எ) த்வீப் மற்றும் தலைமறைவாக உள்ள ரெட்வனுல் ஆசாத் ராணா ஆகிய 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா 10,000 டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்சுதுல் ஹசன் (எ) அனிக் என்பவருக்கு ஆயுள் தண்ட னையுடன் 10,000 டாக்கா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகமது இசான் ரெசா (எ) ருமன், நயெம் சிக்தர் (எ) இராஜ் மற்றும் நபிஸ் இம்தியாஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறையும் 5,000 டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சத்மன் யாசிர் முகமதுக்கு 3 ஆண்டு சிறையும் 2,000 டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஏபிடி-யின் தலைவர் முப்தி ஜஷிமுதீன் ரஹ்மானிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 2,000 டாக்கா அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான தூதர் வாபஸ்
கடந்த 1971-ல் நடந்த போர்க் குற்றம் தொடர்பான விசாரணை தொடர்பாக பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நி லையில், பாகிஸ்தானில் உள்ள தூதரை வங்கதேசம் திரும்ப அழைத்துக் கொண்டது.
இதுகுறித்து வங்கதேச வெளி யுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ் தானில் உள்ள தூதர் சுராப் ஹுசைனை உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள் ளோம்” என்றார். இதற்கிடையே அந்த அதிகாரியின் ஒப்பந்த காலம் முடிய உள்ளதால் அவரை திரும்ப அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்ன தாக, தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததால் வங்கதேசத்தில் உள்ள தங்களது தூதரகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.