Published : 04 Jun 2016 10:36 AM
Last Updated : 04 Jun 2016 10:36 AM

மனைவி, பேராசிரியரை கொன்று இந்தியர் தற்கொலை

மனைவி மற்றும் பேராசிரியரை சுட்டுக் கொன்று விட்டு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தற்கொலை செய் துகொண்டார். அவர் மற்றொரு பேராசிரியரையும் கொல்ல திட் டமிட்டது தெரியவந்துள்ளது.

மின்னாசோட்டாவில் வசித்து வந்தவர் மாய்னிக் சர்க்கார் (38). இவர் தன் மனைவி ஆஷ்லே ஹஸ்தியை சுட்டுக் கொன்றார். பின்னர் அங்கிருந்து சுமார் 3,200 கி.மீ. தொலைவிலுள்ள கலிபோர்னியா லாஸ்ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென் றார். அஙகு, தனது முன்னாள் பேராசிரியர் வில்லியம் கிளக் என்பவரைச் சுட்டுக் கொன்றார். பின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

சர்கார் தனது வீட்டில், தான் கொலை செய்ய வேண்டியவர்க ளின் பட்டியலை எழுதி வைத்துள்ளார். அதில் தனது மனைவி, பேராசிரியர் கிளக் மற்றுமொரு பேராசிரியையின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறை தலைவர் சார்லி பெக் கூறும் போது, “பேராசிரியர் கிளக்கை சர்க்கார் பல முறை சுட்டுள் ளார். அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இன்னொரு பேராசிரியரைக் கொல்ல திட்டமிட்டு வந்துள் ளார். அதற்காக கூடுதல் துப்பாக் கிகள், குண்டுகளுடன் தயாராக வந்துள்ளார். ஆனால், அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், கிளக்கைக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

சர்க்கார் தனது வலைப்பூவில், பேரா சிரியர் கிளக் தன்னை மோசம் செய்துவிட்டதாக எழு தியுள்ளார். ஐஐடி காரக்பூரில் படித்த சர்க்கார், கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத் தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.

புதன்கிழமை நடந்த இக் கொலை தொடர்பாக காவல்துறை யுடன் இணைந்து சிஐஏவும் விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x