பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாதிகள் கைவரிசை: சிறைபிடித்தவர்கள் மீட்பு

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாதிகள் கைவரிசை: சிறைபிடித்தவர்கள் மீட்பு
Updated on
1 min read

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தேவலாயத்தில் மர்ம நபர்களால் கத்தி முனையில் பணைய கைதிகளாக இருந்தவர்களை போலீஸார் மீட்டனர்.

பிரான்ஸின் வடக்கு நார்மண்டி பகுதியில் தேவாலயம் ஒன்றில் 5 பேரை கத்தி முனையில் இருவர் பிணைக் கைதிகளாக சிறைபிடித்ததால் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் பிணைய கைதிகளில் ஒருவர் பலியானதாகவும் மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் இருவர் பாதிரியார் ஒருவர் உட்பட ஐந்து பேரை பிணையகைதியாக பிடித்து வைத்திருந்தனர்.

பணயக்கைதிகளில் இருந்த நபர் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த ரகசியத் தகவலின் பேரில் அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் தேவாலயத்திற்கு நுழைந்து மர்ம நபர்களை சுட்டு கொன்று பணைய கைதிகளை மீட்டனர்.

இச்சம்பவத்தில் பணைய கைதியாக இருந்த பாதிரியார் ஜாகுவிஸ் ஹமில்(84) மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேசினவோ கூறியதாவது, மர்ம நபர்கள் குறித்தும் அவர்கள் எதற்காக இத்தாக்குதலில் எதற்கு ஈடுபட்டார்கள் என விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in