

பாகிஸ்தான் கடற்படையை வலுப் படுத்தும் வகையில் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா வழங்குகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே நட்புறவு அதி கரித்து வரும் நிலையில் பாகிஸ் தானும் சீனாவும் மிகவும் நெருக்க மாகி உள்ளன. இரு நாடுகளும் இணைந்து ஜே-17 என்ற போர் விமானத்தை தயாரித்து வருகின் றன. இது தவிர பாகிஸ்தான் தரைப் படைக்கு தேவையான பீரங்கிகளை சீனா விநியோகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ் தான் கடற்படைக்காக 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா வழங்குகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி வரும் 2023-ம் ஆண்டில் 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தானிடம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் வரும் 2028-ம் ஆண்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.