Last Updated : 14 Oct, 2014 10:25 AM

 

Published : 14 Oct 2014 10:25 AM
Last Updated : 14 Oct 2014 10:25 AM

ஐஎஸ் அமைப்பிடமிருந்து நாட்டை மீட்பதற்கு இராக்கியர்கள்தான் போரிட வேண்டும்: ஜான் கெர்ரி

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், தாய்நாட்டை மீட்பதற்காக இராக்கியர்கள்தான் அந்த அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றிருந்தார். அந்நாட்டு அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மறு நிர்மாணத்துக்காக நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கெய்ரோவில் செய்தியாளர்களிடம் ஜான் கெர்ரி கூறியதாவது: தாய்நாட்டை மீட்பதற்காக இராக்கியர்கள்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும். குறிப்பாக ஐ.எஸ். அமைப்பினர் அன்பர் மாகாணத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றி உள்ளனர். அங்கு வசிப்பவர்கள் இராக்கியர்கள். அவர்கள்தான் அந்த அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும். அதே நேரம், இராக் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. அதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

இதுபோல் சிரியாவின் கொபானே நகரையும் கைப்பற்று வதற்கான முயற்சியில் ஐ.எஸ். அமைப்பு முயன்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டுப் படையை அமைக்க சிறிது காலம் பிடிக்கும் என்று முன்பிருந்தே கூறி வருகிறோம். இப்போது ஐ.எஸ். அமைப்பை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான உதவியை அளிக்க 60-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதி பூண்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இராக்கில் அன்பர் மாகாணத்தின் 80 சதவீத பகுதியை ஐஎஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் அமெரிக்க ராணு வம் வான் வழி தாக்கு தல் நடத்தி யும் பலன் கிடைக்கவில்லை. சிரியாவில் குர்து இனத்தவர் களின் கட்டுப்பாட்டில் இருந்த கொபானே நகரைக் கைப்பற் றுவதற்காக 3 வாரங்களாக ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நகரை ஐ.எஸ். கைப்பற்றினால் அதிக அளவில் மனிதப்படுகொலை நடக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x