Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

அமெரிக்க தாக்குதலை எதிர்த்து இம்ரான் கான் கட்சியினர் போராட்டம்

பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்கு தல் நடத்தி வரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை யினருக்கு எதிராக, இம்ரான் கான் கட்சியின் ஆதரவாளர்களின் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினருக்கு பாகிஸ்தான் வழியாக அத்தியாவசிய பொருள்கள் லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன.

இந்நிலையில், கைபர்-பக்துன்கவா மாநிலத்தில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பெஷா வர், தேரா இஸ்மாயில் கான், அட்டோக், கைராபாத் மற்றும் ஸ்வாபி ஆகிய நகரங்கள் வழி யாக நேட்டோ படையினருக்கு லாரிகள் மூலம் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் வழிகளை மூடி உள்ளனர். அத்துடன் அவ்வழியாகச் செல்லும் அனைத்து லாரிகளையும் இம்ரான் ஆதரவாளர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இம்ரான் கூறுகை யில், "நேட்டோ படையினர், ஆளில்லா விமானம் மூலம் ஏவுக ணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும். நேட்டோ படையினருக்கு பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்கு சட்டப்படி எங்களுக்கு உரிமை உள்ளது" என்றார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற கான் கூறுகையில், "தேர்தலின் போது, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தாதவரை அமைதி ஏற்படாது" என்றார். கடந்த 1-ம் தேதி நேட்டோ படை யினரின் தாக்குதலில் தெஹ்ரிக்-இ-பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டார். அதன்பிறகு, இம்ரான் கட்சி உள்ளிட்ட பல மதவாத அமைப்புகள் நேட்டோ படையினருக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் வழிகளை மூட முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x