

ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்ஸி டிரைவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு, ஆஸ்திரேலியா வில் பிறந்த டாக்ஸி டிரைவர்களை விட இந்திய டாக்ஸி டிரைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நியூஸ்.காம்.ஏயு என்ற இணைய தளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியல் துறை தரவுகளின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு, ஆஸ்தி ரேலியாவில் இந்திய டாக்ஸி டிரைவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அது, ஒரு நாட்டில், குறிப்பிட்ட பணி ஒன்றில் உள்நாட்டில் பிறந்தவர்களை விட, ஒரே வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக இருப்பது முதன் முறையாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் 2006 ஆம் ஆண்டு 2,000 ஆக இருந்த இந்திய டாக்ஸி டிரைவர்களின் (ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்தியர்கள் கணக்கில் கொள்ளப் படமாட்டார்கள்) எண்ணிக்கை, 2011இல் 6,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, இந்திய துணைக்கண்ட மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதை விருப்புரிமையுடன் தேர்வு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கல்வி விசாக்களில், பட்டப்படிப்பு முடித்த பிறகு வேலை செய்யவும் அனுமதி உண்டு. தாங்கள் படித்து முடித்த அதே துறைகளில் வேலை கிடைக்காதபோது, மாணவர்கள் டாக்ஸி டிரைவர்களாக மாறி விடு கின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாகாணத்தில் இந்திய டாக்ஸி டிரைவர்களின் ஆதிக்கம் மிக அதிகம்.
டிரைவர் வேலை தவிர, டெக்ஸ்டைல், தொழில்முறை சமையல், வீட்டு வேலைகள் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியப் பணியாளர்கள் அதிக அளவு வேலை செய்கின்றனர். -பி.டி.ஐ.