Last Updated : 13 Oct, 2014 08:23 PM

 

Published : 13 Oct 2014 08:23 PM
Last Updated : 13 Oct 2014 08:23 PM

சீன அரசு வலைதளங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட விவரங்கள் கசிவு

ஹேக்கர்களால் சீன அரசின் இரண்டு வலைதளங்களிலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளன. இந்த ஹேக்கிங் கூடுதல் ஜனநாயகத்துக்காக போராடும் ஹாங்காங் மாணவர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் ஷேஜியாங் மாகாணத்தின் வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு கழகத்தின் இணைய வலைதளங்களிலிருந்து ஹேக்கர்களால் நூற்றுக்கணக்கான தொலைப்பேசி எண்கள், இ-மெயில் முகவரி மற்றும் நபர்களின் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவவை ஆகும்.

இந்த இரண்டு இணையதளங்களும் ஹேக் செய்யப்படுவதற்கு முன்பு, இணையதளங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக சீன அரசு முறையாக அறிவித்தது. சம்பந்தப்பட்ட ஹேக்கிங் அமைப்பு இரண்டாவது முறையாக இதன் மூலம் ஹாங்காங் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

அத்துடன் தங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x