பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: 8 பேர் சாவு

பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: 8 பேர் சாவு
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி யில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமான தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.

கைபர் பக்துன்கவா மாகாணம், ஹாங்கு மாவட்டம், தல் பகுதியில் உள்ள மதக் கல்விக் கூடத்தின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வியாழக்கிழமை அதி காலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தியது. விமானத்தில் இருந்து ஏவப்பட்ட 3 ஏவுகணை வீச்சில் அங்கிருந்த 8 பேர் உயிரிழந்தனர். 5 மாணவர்கள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அந்த மதக் கல்விக் கூடத்தில் பணியாற்றும் மத குருக்கள் அனைவரும் தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு டையவர்கள் எனக் கூறப்படுகிறது.

தலிபான் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், ஆளில்லா விமான தாக்குதல் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா சமீபத்தில் உறுதியளித்திருந்தது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைக்கான ஆலோச கர் சர்தாஜ் அசிஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா தாக்குதலை நடத்தி யுள்ளதால் பாகிஸ்தான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

கடைசியாக நவம்பர் 1-ம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தெஹ்ரிக் – இ – தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் கொல்லப் பட்டது நினைவு கூரத்தக்கது.

ஹாங்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இத்தகைய தாக்குதலின் மூலம் பாகிஸ்தான் மீது அமெரிக்கா போர் பிரகடனம் செய்திருப்பதாகவே தாங்கள் கருதுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in