

விண்வெளியில் சீனா உருவாக்கி வரும் ஆய்வுக் கூடம் வரும் 2022-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதற்காக விண்வெளி சென்று பூமி திரும்பக்கூடிய விண்கல சோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. அந்த ஆய்வுக் கூடத்துக்கு விண்வெளி வீரர் களுடன் அமெரிக்க, ரஷ்ய விண் கலன்கள் சென்று திரும்பி வரு கின்றன.
இதேபோல சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் தியான் கோங் என்ற பெயரில் விண்வெளி யில் தனியாக ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற் கான முதல்கட்ட பணிகள் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப் பட்டது. இந்த ஆய்வுக் கூடம் 2022-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று சீன விண் வெளி ஆய்வு நிறுவனம் அறிவித் துள்ளது.
அடுத்தகட்ட சோதனை
இதற்கு முன்னோட்டமாக விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமி திரும்பக்கூடிய விண்கல சோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கடந்த சனிக் கிழமை ‘மார்ச் 7’ என்ற விண்கலம், வென்சாங் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் வடக்கு சீனாவின் பாடைன் ஜரான் பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தற்போது வீரர்கள் இல்லாமல் வெறும் விண்கலம் மட்டுமே விண்வெளி சென்று திரும்பி யுள்ளது. அடுத்த கட்டமாக வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று மூத்த விஞ்ஞானி பாங் தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த செப்டம்பரில் சீன விண்வெளி ஆய்வுக் கூடத் துக்கு தேவையான உபகரணங் களுடன் 2 வீரர்கள் ‘மார்ச் 7’ ரக விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளனர்.
இந்தியாவின் முயற்சி
மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் விண்ணுக்கு சென்று விட்டு திரும்பும் ஆர்.எல்.வி-டிடி என்ற ராக்கெட்டை இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தியது. அந்த ராக்கெட் விண்வெளிக்கு சென்றுவிட்டு பத்திரமாக பூமி திரும்பி கடலில் விழுந்தது. தண்ணீரில் மிதக்கும் வகையில் ராக்கெட் வடிமைக்கப்படாததால் அது உடைந்துவிட்டது.
இந்த ராக்கெட் முழுமை பெற 15 ஆண்டுகள் ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனா இப்போதே விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு திரும்பும் விண்கலத்தை உருவாக்கிவிட்டது.