Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

குமாரவேலு குடும்பத்துக்காக நிதி திரட்டும் சிங்கப்பூர் தமிழர்கள்

சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த குமாரவேலு குடும்பத்துக்காக அந்த நாட்டு தமிழர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பஸ் மோதி குமாரவேலு உயிரிழந்தார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. போலீ ஸார் கலவரத்தை கட்டுப்படுத்தி இந்தியர்கள் பலரை கைது செய்தனர்.

இதுவரை 3700 வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இறுதியில் கடந்த செவ்வாய்க்கி ழமை 24 பேரை கைது செய்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதன்கிழமை மேலும் 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டடது.

இந்நிலையில் செல்லமுத்து இளங்கோவன், அம்மாசி வெங்க டேசன், தனபால், ஆறுமுகம் கார்த்திக் ஆகிய 4 பேர் மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி திரட்டும் பணி

இதனிடையே குடிபெயர்ந்தோர் தொழிலாளர் மையம் சார்பில் குமாரவேலு குடும்பத்துக்காக நிதி திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சிறிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.

லண்டனில் கல்வி பயிலும் 2 மாணவர்கள் இணையதளம் மூலமாக நிதி திரட்டி வருகின்றனர். மேலும் சில தனியார் தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. சிங்கப்பூர்வாசிகளான டாய் வாங், கெய்லி சிம் ஆகியோர் தனிப்பட்ட முறையில் குமாரவேலு குடும்பத்துக்காக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் திரட்ட திட்டமிட்டு நிதிவசூலில் இறங்கி யுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் நம்மால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

குமாரவேலு மிகவும் நல்ல மனிதர்

உயிரிழந்த குமாரவேலு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவரது குணநலன் குறித்து அவரது நெருங்கிய நண்பர் குமார், சிங்கப்பூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

குமாரவேலும் நானும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அவர் அதிகம் பேச மாட்டார். மிகவும் நல்ல மனிதர்.சனிக்கிழமைகளில் இருவரும் ஒன்றாக வெளியே சென்று சாப்பிடுவது வழக்கம். அவர் இல்லாமல் வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அவரது திடீர் மரணம் இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x