

பிரிட்டனில் தனது காதலியுடன் பேஸ்புக் மூலம் தொடர்புகொண்ட நண்பனை கொலை செய்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
ஸ்காட் ஹம்ப்ரேவின் (27) காதலியுடன் அவரது நண்பர் ரிச்சர்டு ரொவெட்டோ (29) பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இதை அறிந்த ஹம்ப்ரே ஆத்திரமடைந்துள்ளார். ஒரு நாள் இருவரும் டாக்சியில் சென்று கொண்டிருந்தபோது ரொவெட்டோவை ஹம்ப்ரே தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த ரொவெட்டோ இறந்துவிட்டார். இதுதொடர்பாக நாட்டிங்காம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
டாக்ஸி ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தில், “என்னுடைய நண்பனாக இருந்துகொண்டு என்னுடைய காதலியுடன் பேஸ்புக்கில் ஏன் தொடர்புகொண்டாய் என ஹம்ப்ரே ரொவெட்டாவிடம் கேட்டார். அதற்கு, அவள் உனது காதலி என்று எனக்கு தெரியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஹம்ப்ரே ரொவெட்டாவை தாக்கினார்” என தெரிவித்தார்.
இதையடுத்து, ஹம்ப்ரேவுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி கிரிகோரி டிக்கின்சன் தீர்ப்பு அளித்தார்.