

பாகிஸ்தானில் இந்துப் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் சானியா குமாரி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண் புதன்கிழமையன்று நசிராபாத் மாவட்டத்திலுள்ள பாபா காட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கோடாரியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து குமாரியின் சகோதரர் கூறும்போது, "எனது சகோதரி இப்பகுதியிலுள்ள செல்வாக்கு மிக்க நபர்களால் எந்தக் காரணமுமின்றி கொல்லப்பட்டுள்ளார். எனது சகோதரியின் மரணம் குறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் எங்கள் இல்லத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று கூறினார்.
இந்தக் கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.