

முன்னாள் இந்திய கப்பற்படை கமாண்டர் குல்பூஷன் யாதவ் தனது மரண தண்டனையை எதிர்த்து ராணுவத் தளபதி குவாமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததையடுத்து செனேட் உரையில் கவாஜா ஆசிப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பாஜ்வா கூறும்போது, இந்திய அரசு சார்பாக ஜாதவ், ரா உளவாளியாக பாகிஸ்தான் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் எந்த வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜாதவ் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவரது ஈடுபாடு நிரூபிக்கப்பட்டது என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.
விசாரணைகளின் போது ஜாதவ்வை தொடர்புகொள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.