

2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெறும் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய்-க்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வெற்றி மனித உயிர்களின் மான்பினை காக்கும் போராடும் அனைவருக்குமான வெற்றி. என் சார்பாகவும், எனது மனைவி மிச்செல் சார்பாகவும், அமெரிக்கர்களை அனைவரது சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என ஒபாமா கூறியுள்ளார்.