

பெண் ஊழியர்களின் கரு முட்டையை உறையவைத்து பாதுகாப்பதற்கான (எக் ப்ரோஸனிங்) செலவை ஏற்பததாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
பெண் ஊழியர்கள் குழந்தை பிறப்பை தள்ளி வைத்து நிறுவனத்துக்காக முழுமையாக உழைப்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கருமுட்டையை பாதுகாப் பதன் மூலம் பெண் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் வசதியான நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக ஓர் ஊழியருக்கு தலா 20 ஆயிரம் டாலர் வரை அந்நிறுவனங்கள் ஒதுக்குகின்றன.
ஆண் ஊழியர்களுக்கும் சலுகை
இது தவிர ஊழியர்கள் கருவுறாமை சிகிச்சை மேற் கொண்டால் அதற்கான செலவையும், ஆண் ஊழியர்கள் விந்து தானம் செய்தால் அதற்கான செலவையும் பேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சட்டப்படியாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் செலவுக்கு பதிலாக கரு முட்டையை பாதுகாப்பு செய்து குழந்தை பெறுவது சிறந்தது.
இதனால் மலட்டுத்தன்மை உள்ளவர் என்ற பெயர் நீங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.