

போபால் ஆலை வடிவமைப்பு, கட்டுமானத்தில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் போபால் நகர ஆலையில் 1984-ல் ஏற்பட்ட விஷவாயு கசிவில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனம் நடத்திய அந்த ஆலையில் டன் கணக்கில் ரசாயனக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
அதனை யூனியன் கார்பைடு நிறுவனம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கும் அந்த ஆலைக்கும் நேரடி தொடர்பு கிடையாது. அதன் இந்திய பங்குதாரர்களே ஆலை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று யூனியன் கார்பைடு வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் போபால் ஆலை வடிவமைப்பு, கட்டுமானம், கழிவை அகற்றும் திட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருக்கும் ஆதாரங்களை வழக்கை தொடர்ந்துள்ள மனு தாரர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆதாரங்கள் நியூயார்க் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.