

ஊழல் வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சீன தலைவர் போ சிலாய், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு மாகாண மேல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சீன அரசியல் தலைவரான, போ சிலாய், மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளும் பிரிட்டன் வர்த்தகர் கொலை வழக்கில், அவர் மனைவி, க்யூ கெலாய்க்கு தொடர்பு உண்டு, ஆனால் மனைவி மீது, வழக்கு பதிவு செய்யாமல், போலீஸ் அதிகாரிகளை தடுத்தார் போன்ற குற்றச்சாட்டுகளும், எழுந்தன.
இந்நிலையில், சீனாவின் ஜினான் நகர கோர்ட்டில், சிலாய் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் போது, சிலாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றம், போ சிலாய்க்கு, ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தண்டனை, சட்டத்துக்கு முரணானது என, கூறிய போ சிலாய், இந்த தண்டனைகளை எதிர்த்து, மேல்முறையீடு செய்தார்.