மகளின் கண் எதிரே முன்னாள் வெனிசுலா அழகி சுட்டுக்கொலை

மகளின் கண் எதிரே முன்னாள் வெனிசுலா அழகி சுட்டுக்கொலை
Updated on
1 min read

முன்னாள் வெனிசுலா அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான மோனிகா ஸ்பியர், நெடுஞ்சாலயில் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். அவருடன் அவரது ஐந்து வயது மகளும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

29 வயதான மோனிகாவின் கார், பியூர்டோ காபெல்லொ - வேலன்சியா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, சிறிய விபத்தில் பழுதடைந்து பாதியில் நின்றது. அப்போது, இளைஞர்கள் சிலர், இவர்களை கொள்ளை அடிக்க முற்பட்டபோது மோனிகாவும், அவரது முன்னாள் கணவர் ஹென்ரியும் சுடப்பட்டு இறந்தனர். இவர்களது பெண் குழந்தை மாயாவுக்கு காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர் மட்டும் பிழைத்துக் கொண்டார்.

கொள்ளையர்கள் ஆயுதத்துடன் வருவதை தூரத்திலிருந்தே பார்த்த மோனிகா மற்றும் ஹென்ரி, காருக்குள் சென்று பூட்டிக்கொண்டதாகவும், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சுட்டுவிட்டுச் சென்றதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

2004-ஆம் ஆண்டு வெனிசுலா அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோனிகா, 2005-ஆம் ஆண்டு, தாய்லாந்தில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் பங்கேற்றார். பிறகு, வெனிசுலாவில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றும் ஓளிபரப்பாகிவந்தது. இறப்பதற்கு முன்வரை தனது இந்தப் பயணத்தை, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மோனிகா பதிவு செய்துவந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in