

பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கக் கோரி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் அனுப்பி இருந்தது.
அதுதொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களில் உள்ள தொழில்நுட்ப சாதகங்களை ஆராய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 15 உறுப்பு நாடுகளிடம் கருத்து கேட்டிருந்தது. எந்த நாடும் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் கடைசி நேரத்தில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது.
இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா நிறுத்தி வைத்தது. தொழில்நுட்ப அடிப் படையில் இந்தத் தடை ஆறு மாதங்களில் காலாவதியாகிவிடும். எனவே, செப்டம்பருடன் சீனாவின் தடை முடிந்துவிடும். எனினும், அசார் மீதான இந்தியாவின் விண் ணப்பத்தை தொழில்நுட்ப ரீதியாக நிறுத்தி வைக்க சீனா கூடுதல் அவகாசம் கோரலாம்.