

நீடித்த மோதல்களுக்கு தீர்வு காண சர்வதேச அமைப்புகள் தீவிரமாக களமிறங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் பேசியதாவது:
ஐரோப்பாவுக்குள் ஏற்கெனவே தீர்க்கப்படாத, நீடித்த மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் புதிய அச்சுறுத்தல்களும், சவால்களும் வேறு உருவாகி வருகிறது. ஜனரஞ்சகம், தேசிய வாதம் மற்றும் பிரிவினைவாதம் தான் மோதல்களுக்கான காரணங் களாக அமைகின்றன.
பல சமயங்களில் அமைதி உடன்படிக்கைகள் அமல்படுத்தப் படுவதில்லை. ஜனநாயக நிர்வாகம் மற்றும் சட்டப்படியான ஆட்சி முறைகளுக்கு எதிரான சவால் களும் மோதல்களுக்கு காரணமா கின்றன. அரசியல் ஆதாயத்துக் காகவோ அல்லது சுய லாபத்துக் காகவேதான் இன, பொருளாதார, மத மற்றும் ஜாதி ரீதியிலான பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
மோதல்களை உருவாக்கு வதற்கு என்ன காரணங்கள் இருந்தாலும், அதனை திறம்பட கையாண்டு தடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச அமைப்பு களுக்கு இருக்கிறது. இதற்காக சர்வதேச அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் மோதல்களைத் தடுத்து நிறுத்தி வெற்றி காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.