Last Updated : 15 Jun, 2016 10:17 AM

 

Published : 15 Jun 2016 10:17 AM
Last Updated : 15 Jun 2016 10:17 AM

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கிரகம் கண்டுபிடிப்பு: 2 சூரியன்களை சுற்றி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கிரகம் ஒன்றை அமெரிக்க விண் வெளி ஆய்வு மைய (நாசா) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ள்ளனர். அந்த கிரகம் 2 சூரியன் களை சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், கிரீன்பெல்ட் பகுதியில் உள்ள நாசாவின் கொட்டார்டு ஸ்பேஸ் பிளைட் சென்ட்டர் மற்றும் சான் டியாகோ மாகாண பல்கலைக்கழக வானியல் விஞ் ஞானிகள், கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

பால்வெளி மண்டலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகத்துக்கு கெப்ளர்-1647பி என பெயரிட்டு ள்ளனர். இந்த பிரபஞ்சத்திலேயே இதுதான் மிகப்பெரிய கிரகமாக இருக்கும் என கருதுகின்றனர். இப்போது வரை வியாழன் கிரகம்தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

3,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகத்தின் வயது 440 கோடி ஆண்டுகள் (கிட்டத்தட்ட பூமியின் வயது) என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள 2 சூரியன்களை சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று நமது சூரியனைவிட பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய கிரகம் அதன் சூரியன்களைச் சுற்றி வர 1,107 நாட்கள் (சுமார் 3 ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x