

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினல் ஜெனரல் ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் தற்போதைய ராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வெஸ் கயானியின் பதவிக் காலம் வரும் 29-ஆம் தேதி நிறைவடைவதையடுத்து, புதிய தளபதியாக ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ராணவ பணியாளர்களின் குழுத் தலைவராக லெப்டினல் ஜெனரல் ரஷித் மெஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு தளபதிகளின் பெயர்களையும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரிந்துரைக்க, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ரஹீல் ஷெரீப்பையும், ரஷித் மெஹ்முத்தையும் தனித்தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அரசு விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது என அரசு மேலதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லெப்டினல் ஜெனரல் ரஹீல் ஷெரீப் குஜ்ரன்வாலா, பாகிஸ்தான் ராணுவ அகாடமி கமாண்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலோச் படைப் பிரிவிலிருந்த லெப்டினல் ஜெனரல் ரஷித் மெஹ்மூத், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ராஃபிக் தாரரிடம் ராணுவச் செயலராக இருந்தவர். மேலும், இவர் லாகூரில் கமாண்டராக பணியாற்றியவர்.
இவர்களின் பதவியேற்பு விழா இம்மாதம் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.