

சவூதி அரேபிய கடல் பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் துரப்பண மேடை சரிந்ததில் காணாமல் போன 2 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரது சடலங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் 2 பேரின் சடலங்களை வெள்ளிக்கிழமை இரவும், ஒருவரின் சடலத்தை சனிக்கிழமை காலையிலும் மீட்டதாக கிழக்கு மாகாண கடற்படை செய்தித் தொடர்பாளர் கர்னல் அல்-அர்குபி தெரிவித்தார்.
அல் சபானியா என்ற இடத்தில் உள்ள கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை உள்ளது. சவூதி அரசின் ஆரம்கோ நிறுவனத் துக்குச் சொந்தமான இந்தப் படுகையில் உள்ள எண்ணெய் கிணற்றில் பராமரிப்புப் பணி மேற் கொண்டபோது ஏற்பட்ட விபத்தால் 3 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதே பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 24 ஊழியர்கள் சிறிய காயங்களுடன் உயிருடன் மீட்கப் பட்டதாக ஆரம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.