

ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளவாடங்களைக் கையாளு வதற்கு தேவையான வானிலை விவரங்களை உடனடியாக பெற, இந்திய செயற்கைக்கோள் சேவைகளைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு இது வரை இவ்விஷயத்தில் உதவி வந்த ஐரோப்பாவின் ‘மெடியோ சாட் 8’ செயற்கைக்கோள், ஈராக் மற்றும் சிரியாவில் மேற்கொள் ளப்படும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.
எனவே, கிழக்கு ஆப்கானிஸ் தானில் ராணுவ நடவடிக்கைகளுக் கான வானிலை தகவல்களைப் பெற சீனாவின் செயற்கைக் கோளைப் பயன்படுத்த முதலில் அமெரிக்கா திட்டமிட்டது. ‘ஹாக்கிங்’ அச்சுறுத்தல் காரண மாக, அத்திட்டத்தை தொடக்கத் திலேயே கைவிட்ட ‘பென்டகன்,’ இந்திய செயற்கைக்கோளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஏற் கெனவே தகவல் அளித்துவரும், தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரு செயற்கைக்கோளை ஆப்கன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் அறிவியல், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப துணைக்குழு சார் பில் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப் பினர்களிடம் இத்தகவலை ‘பென்டகன்’ உயரதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ‘இவ் விஷயத்தில் பென்டகனின் முதல் விருப்பத் தேர்வாக இந்தியா இல்லை’ என அமெரிக்க விமானப்படையின் வானிலை பிரிவு இயக்குனர் ரால்ஃப் ஸ்டாஃப்லர் கூறினார்.