எல்லோரையும் நட்புடன் அணுகுகிறது இந்தியா: குர்ஷித்

எல்லோரையும் நட்புடன் அணுகுகிறது இந்தியா: குர்ஷித்
Updated on
1 min read

வளர்ந்த, வளர்ச்சியடையும் நாடுகளுக்கு இடையே இந்தியா ஒரு முக்கியமான பாலமாக செயல்படுகிறது. உலக நாடுகளுடன் இந்தியாவுடனான நட்பு இயல்பானது, எல்லோரையும் நட்புடன் அணுகுகிறது இந்தியா என மத்திய வெளியறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பேணுவதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இந்தியாவின் இந்த தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஒவ்வொரு முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்படும் போதும், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க மற்ற நாடுகள் பல ஆதரிப்பது தான்.

சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தின், தெற்கு ஆசியா பற்றிய படிப்புகளுக்கான துறைக்கு அளித்த பேட்டியில் தான், சல்மான் குர்ஷித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவு குறித்து பேசிய சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அண்மையில், எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்தும் ஒரு முதல் அடி, இனியும் படிப்படியாக 2 நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in