துருக்கியில் 3 மாதம் நெருக்கடி நிலை: அதிபர் எர்டோகன் அறிவிப்பு

துருக்கியில் 3 மாதம் நெருக்கடி நிலை: அதிபர் எர்டோகன் அறிவிப்பு
Updated on
1 min read

துருக்கியில் 3 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய் யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 15-ம் தேதி இரவு அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். ஆளும் ஏ.கே கட்சி, எதிர்க்கட்சி கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ராணுவ புரட்சியை முறியடித்தனர். இதில் புரட்சி படையை சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகன் ஆதர வாளர்கள் 208 பேரும் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து ராணுவத் தில் மூத்த தளபதிகள் உட்பட 9 ஆயிரம் பேர், 2750 நீதிபதிகள், 8000 போலீஸார் கைது செய்யப் பட்டனர். நாடு முழுவதும் இது வரை 50 ஆயிரம் கைதாகியுள்ளனர்.

மேலும் கல்வித் துறையைச் சேர்ந்த 15,200 அதிகாரிகள், 21 ஆயிரம் ஆசிரியர்கள், நிதித்துறை சேர்ந்த 15,000 ஊழியர்கள், பிரதமர் அலுவலக ஊழியர்கள் 257 பேர் என ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ராணுவ புரட்சி இன்ன மும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. எனவே துருக்கியில் நேற்றுமுன்தினம் முதல் 3 மாதங்கள் நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் அமல்படுத்தியுள்ளார். அவர் கூறியபோது, ராணுவத்தில் வைரஸ் கிருமி பரவியுள்ளது. அந்த கிருமிகள் அழிக்கப்படும் வரை ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்று எச்சரித்தார்.

ராணுவ புரட்சியின்போது அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக பொதுமக்கள் செயல்பட்டனர். ஆனால் நாட்டின் எதிர்காலம் குறித்த கருத்தில் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையே வேறுபாடு கள் எழுந்துள்ளன. நெருக்கடி நிலை பிரகடனத்தை பல்வேறு எதிர்க் கட்சிகள் கண்டித்துள்ளன.

அமெரிக்கா மறுப்பு

புரட்சியை தூண்டியதாக அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன் மீது அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டி வருகிறார். அவரை மீண்டும் துருக்கிக்கு திருப்பி அனுப்புமாறு அமெரிக்காவிடம் துருக்கி அரசு முறைப்படி கோரியுள்ளது.

ஆனால் பெதுல்லா குலனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் துருக்கி அரசின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in