

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பகுதிக்கு காரில் வந்த மர்ம பெண் அங்கிருந்த பாதுகாப்பு தடுப்புகளை தகர்த்து விட்டு, தப்பிச் சென்றதால் போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர்.
இது குறித்து வாஷிங்டன் காவல் உயர் அதிகாரி கூறுகையில்: உள்ளூர் நேரப்படி 2.15 மணியளவில் வெள்ளை மாளிகையை நோக்கி கருப்பு நிற கார் ஒன்று வேகமாக வந்தது.
அந்த கார் அங்கிருந்த தடுப்பு வளையங்களை மோதி உடைத்து விட்டது அதே வேகத்தில் சென்றது. உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். காரை சுற்றி வளைத்த பாதுகாப்பு அதிகாரிகள் காரை துரத்திச் சென்றனர். பின்னர் காரை சுற்றி வளைத்து காரில் இருந்த பெண்ணை சுட்டு வீழ்த்தினர். மேலும், காரில் இருந்து 1 வயது ஆன பெண் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர், என்றார்.
இறந்து போன பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிடவில்லை.