

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த இந்தியருக்கு 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா வில் வசிப்பவர் இந்தியாவைச் சேர்ந்த தேவேந்தர் சிங். இவர் கடந்த மாரச் மாதம் ஹுஸ்டனி லிருந்து மேவார்க் கிற்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, அவரது அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அந்த பெண்ணை முத்தமிட்டு, கட்டியணைக்க தேவேந்தர் சிங் முயற்சித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். விமானம் தரையிறங்கி யதும், அப்பெண்ணின் புகாரின் பேரில் மேவார்க் விமான நிலைய போலீஸார், தேவேந்தர் சிங்கை கைது செய்தனர்.
8 மாதம் சிறை
இவ்வழக்கை மேவார்க் நீதிமன்ற நீதிபதி ஸ்டான்லி ஆர். செஸ்டர் விசாரித்தார். தேவேந்தர் சிங்குக்கு 8 மாத சிறைத் தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
மேலும், சிறையிலிருந்து தேவேந்தர் சிங் வெளி வந்ததும், அவரை 2 ஆண்டுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.