

போர்ச்சுகல் நாட்டில் உள்ள 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஏழு கல் கல்லறைகளும் இரவு நேரத் தில் தெளிந்த வானத்தை உற்று நோக்கும் உலகின் முதல் தொலை நோக்கி கருவியாக செயல்பட் டிருக்கலாம் என தற்கால விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் நீளம், குறுகலான நுழைவாயில் ஆகியவை அந்த கால மனிதர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுவதுடன் இரவு நேர வானத்தை அவர்கள் உற்று நோக்கவும் பயன்பட்டிருக்க கூடும் என்கின்றனர்.
ஏழு கல் கல்லறைகளில் உள்ள சிறு துளையோ அல்லது கதவோ மங்கலான விண்மீன்களை கவனிப்பதில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் குழு ஆராய வுள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட கற்கள் மூலம் பிணைக்கப்பட்ட அறைகள், நீண்ட குறுகலான நுழைவாயில் ஆகியவை குறித்து விஞ்ஞானிகள் குழு ஆழமாக ஆய்வு செய்தது.
இயற்கையான ஒளியை தவிர வேறெந்த ஒளியும் இந்த இடத்துக்குள் புகவில்லை. இதை வைத்து பார்க்கும்போது, தெளிந்த இரவு வானத்தை ஆராய்வதற்காக நமது மூதாதையர்கள் கட்டிய முதல் தொலைநோக்கி கருவியாக இவை இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இது குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்கம் பல்கலைக்கழக மாணவர் கெய்ரன் சிம்காக்ஸ் கூறும் போது, ‘‘இந்த கல்லறைகளை யாரும் முழுமையாக ஆய்வு செய் யாதது ஆச்சரியமாக உள்ளது. வெட்டவெளியில் வெறும் கண் களால் இரவு நேர வானத்தை பார்ப்பதற்கும், இந்த கல்ல றைக்குள் அமர்ந்தபடி பார்ப்பதற் கும் நிறத்தில் இருந்து பல்வேறு வேறுபாடுகள் தென்படுகின்றன என்பது தான்’’ என்கிறார்.