மான்செஸ்டர் குண்டுவெடிப்பு சந்தேக நபர் படிப்பைத் துறந்து தீவிரவாதியானவர்

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு சந்தேக நபர் படிப்பைத் துறந்து தீவிரவாதியானவர்
Updated on
1 min read

மான்செஸ்டர் நகரின் இசை நிகழ்ச்சியில் 22 பேர் பலியாகக் காரணமானவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு தற்கொலைப் படை தீவிரவாதியாக மாறியவர் என்று லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "லண்டன் மான்செஸ்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இசைநிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதலை 22 வயதான சல்மான் அமேடி என்ற இளைஞர் நடத்தியுள்ளார். சல்மான் அமேடி சல்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் வணிகம் மற்றும் மேலாண்மை பட்டப்படிப்பை படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கவில்லை. கல்லூரியில் படிக்கும்போது எந்த கலவரங்களிலும் ஈடுபடவில்லை. 2014 ஆம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அபேடியின் பெற்றோர் லிபியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

அமேடி குறித்து அவரது நண்பர் ஒருவர் கூறும்போது. அவர் சில நாட்களாகவே இறை நம்பிக்கையில் தீவிரவாக செயல்பட்டு வந்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் அவர் லிபியா சென்று வந்தார்" என்றார்.

முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற நகரான மான்செஸ்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in