உலகின் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் உயரும்: ஐநா தகவல்

உலகின் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் உயரும்: ஐநா தகவல்

Published on

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3 டிகிரி செல்சியஸ் உயரும் என வெள்ளியன்று ஐநா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனிவாவில் அமைந்துள்ள உலக வானிலை மையத்தின் வளிமண்டல ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர், டியோன் டெர்ப்லேன்ச் செய்தியாளர்களிடம் வலியுறுத்தி கூறியதாவது,

பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள டொனால்ட் டிரம்பின் முடிவு தெளிவாக இல்லை. நாங்கள் ஒரே இரவில் புதிய மாடல்களை இயக்கவில்லை, ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் 0.3 டிகிரி செல்சியஸ் உயர்வு மிகவும் மோசமாகவே இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. தொழிற்புரட்சி காலத்திற்கு முந்தைய வெப்பநிலைகளை ஒப்பிடும்போது தற்போது உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டியுள்ளது. இது ஒரு மோசமான சூழ்நிலை. இதனால் என்ன நடக்குமோ தெரியவில்லை'' என்றார்.

புவிவெப்பமயமாதலைத் தடுப்பதற்கான 2015ல் பாரீஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட வகையில் அனைத்து உலக நாடுகளும் 2 டிகிரி செல்சியஸ் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டன.

தற்சமயம் அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன. இதனால் அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in