வாரத்திற்கு 10,000 எபோலா நோயாளிகளைப் பார்க்கலாம்: உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை

வாரத்திற்கு 10,000 எபோலா நோயாளிகளைப் பார்க்கலாம்: உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

எபோலா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் படவில்லை எனில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலகச் சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

60 நாட்களுக்குள் எபோலா நோய் நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லையெனில் மேலும் பலர் இந்த கொடிய நோய்க்கு பலியாவதுதான் நேரிடும் என்று உலகச் சுகாதார மையம் எச்சரித்துள்ளது

2 மாதங்களில் மேலும் 10,000 எபோலா நோயாளிகளைக் காண முடியும், நிறைய சாவுகள் ஏற்படும் என்று உலகச் சுகாதார மையத்தின் உதவித் தலைமை இயக்குனர் புரூஸ் அய்ல்வர்ட் இன்று கடுமையாக எச்சரித்துள்ளார்

கடந்த 4 வாரங்களாக வாரத்துக்கு 1,000 புதிய எபோலா நோயாளிகள் உருவாகி வருகின்றனர். எனவே இந்த நெருக்கடிக்கான எதிர் நடவடிக்கைகளை துரிதப்படுத்தாவிடில் எபோலா ஒரு பெரிய அழிவு சக்தியாக உருவெடுத்து விடும் என்று புரூஸ் அய்ல்வர்ட் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in