

லண்டனில் பிரிட்டிஷ் அருகாட்சியகம் அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் அருட்காட்சியகத்துக்கு அருகேவுள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் சரமாரியாக அவர் தாக்குதல் நடத்தினார்.
இந்தத் தாக்குதலை கேள்வியுற்று சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் மர்ம நபரை கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் பெண் ஒருவர் இறந்தததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மர்ம நபரின் தாக்குதலின் பின்னணியில் "தீவிரவாதிகளின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம்" என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை அடுத்து லண்டனின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பை போலீஸார் ஏற்படுத்தியுள்ளனர்.