

நைஜீரியாவில் உள்ள எண்ணெய் கிணறுகளை வெடிவைத்து தகர்க்கப்போவதாக பொகோ ஹாரம் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதன்கிழமை புதிதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகவ் கூறுகையில், "கச்சா எண்ணெய் வளம் மிக்க நைஜர் ஆற்றுப்படுகை பகுதியில் வரும் நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளோம்" என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி எப்போது பதிவு செய்யப்பட்டது என தெரியவில்லை.
இந்த வீடியோ காட்சியில் ஷேகவ் திறந்தவெளியில் இருந்தபடி பேசுகிறார். அவரைச் சுற்றிலும் ஆயுத டாங்க், 2 ராணுவ வேன்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உள்ளனர்.
சில முஸ்லிம் தலைவர் களையும், அரசியல் தலைவர் களையும் கொல்லப் போவதா கவும் அவர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.
ஆப்பிரிக்க பிராந்தியத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக நைஜீரியா விளங்குகிறது. இதன் மொத்த வருமானத்தில் 90 சதவீதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது.